ஆன்மிக சுற்றுப்பயணம்: அவினாசிக்கு சசிகலா 'விசிட்'

ஆன்மிக சுற்றுப்பயணம்: அவினாசிக்கு சசிகலா விசிட்
X
ஆன்மிக சுற்றுப்பயணமாக அவிநாசி வரும் சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு வழங்க தயாராகி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வரும், 11ம் தேதி, திருச்சி அருள்மிகு உத்தமர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், திருவாச்சி அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் கோவில், குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் செல்கிறார். அங்கு சில கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து, எடப்பாடி, சேலம் சென்று, இரவு தங்குகிறார். அங்கு, அவரது ஆதரவாளர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வரும், 12ம் தேதி, மேச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மேட்டூர் வழியாக பண்ணாரியம்மன் கோவில் செல்கிறார். பின், புளியம்பட்டி, சேவூர் வழியாக அவிநாசியில் உள்ள பிரசித்த பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். அங்கிருந்து கோவை சென்று, விமானம் மூலம் சென்னை செல்ல இருப்பதாக பயண அட்டவணை தயாரிக்கப்பட்டு திட்டமிட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!