தெக்கலூர் ஊராட்சியில் ரூ.60 லட்சம் முடக்கம்- திரும்ப கேட்டு முற்றுகை

தெக்கலூர் ஊராட்சியில் ரூ.60 லட்சம் முடக்கம்-   திரும்ப கேட்டு முற்றுகை
X

பங்களிப்பு தொகை திரும்ப கேட்டு முற்றுகையிட்ட மக்கள் 

‘மாவட்ட நிர்வாகத்திடம் முடங்கியுள்ள பொதுமக்களின் பங்களிப்பு தொகையான, 60 லட்சம் ரூபாயை திரும்ப வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி, தெக்கலூர் ஊராட்சி மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், தெக்கலுார் ஊராட்சியில், கடந்த, 2015ம் ஆண்டு, கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ், பொதுமக்களின் பங்களிப்பு தொகையுடன் புதிய குடிநீர் திட்டத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்காக, 'கிராம குடிநீர் திட்டக்குழு' என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பங்களிப்பு தொகையாக, 60 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டம், குடிநீர் வடிகால் வாரியம் மூலமே மேற்கொள்ளப்பட்டதால், திட்டம் நிறைவேறவில்லை.

ஆனால், அந்த பங்களிப்பு தொகை மக்களுக்கு திரும்ப வழங்கப்படவில்லை. அத்தொகையை வழங்கக்கோரி, பங்களிப்பு தொகை கொடுத்தவர்கள் தெக்கலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் கூறுகையில்,'பங்களிப்பு தொகை செலுத்தியவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு, தொகை திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!