திருப்பூர் அருகே ரூ. 14 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

திருப்பூர் அருகே ரூ. 14 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
X

அவினாசியில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்

அவினாசியில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்

அவினாசியில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, முறியாண்டம்பாளையத்தில் கன்னிமார் கோவிலுக்கு சொந்தமான, 3.61 ஏக்கர் நிலம்; தத்தனுார் அடிபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 10.25 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தன.

தண்டுக்காரன்பாளையம் தொட்டியனுார் முட்டத்துராயர் கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம்; தொட்டக்களம் புதுார் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 7.32 ஏக்கர் நிலம்; கருவலுார் தர்மராஜா கோவிலுக்கு சொந்தமான 3.94 ஏக்கர் நிலம் ஆகியனவும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.மொத்தம், 14.28 கோடி ரூபாய் மதிப்பிலான, 31.12 ஏக்கர் பரப்பளவிலான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட இந்து அறநிலையத் துறையினர் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அந்நிலங்களை அறநிலையத்துறை உதவி கமிஷனர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கையகப்படுத்தி, அங்கு அறிவிப்பு வைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!