'விதி'யை மாற்றும் சாலை விதி: கல்லுாரி மாணவிகளுக்கு அறிவுரை

விதியை மாற்றும் சாலை விதி: கல்லுாரி மாணவிகளுக்கு அறிவுரை
X

அவிநாசி கலை அறிவியல் கல்லூரியில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் சக்திவேல் சாலை விதி குறித்து பேசினார் 

சாலை விதியை மதிக்காமல் வாகனம் ஓட்டினால் தலைவிதி தலைகீழாகிவிடும் என, கல்லுாரி மாணவியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம், அவினாசி அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, சாலை விதி மற்றும் போதை பொருள் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் ஜோ.நளதம், தலைமை வகித்தார். அவினாசி போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் அவினாசி சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் அமல் ஆரோக்கியதாஸ் ஆகியோர் பேசினார்.

சாலை விதிகளை மதித்து, வாகனங்களை ஓட்ட வேண்டும். சாலை விதியை மதிக்காததால் தான், விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, சாலை விதியை மதிக்க வேண்டும். அதே போன்று வாழ்க்கையை பாதிக்க செய்யும் போதைப் பொருள் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பது போன்ற கருத்துகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai marketing future