சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடுதல் கவனம் செலுத்த திட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடுதல் கவனம் செலுத்த திட்டம்
X

பைல் படம்.

சாலை விபத்துகளை தவிர்க்க, சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட இடங்களில் சாலை விபத்துகள் அதிகளவில் நேரிடுகின்றன. இதனால், பல நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிடுகிறது. இதை தவிர்க்க விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என, திருமுருகன்பூண்டியில் செயல்படும் 'தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன்' தலைவர் காதர்பாட்ஷா, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோர் உள்ளிட்டோர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் யோசனை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில்,'பெரும்பாலும், கவனக்குறைவு, அதிவேகத்தால் தான் விபத்து நேரிடுகிறது. சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வை, தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து மேற்கொள்வது தொடர்பான திட்டமிடலை வகுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

அதன்படி, அடுத்த மாதம் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ள சாலை பாதுகாப்பு வார விழாவில், விபத்துகளை குறைப்பதற்கான திட்டமிடல், விழிப்புணர்வை தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து மேற்கொள்ள, வட்டார போக்குவரத்து அலுவலர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture