பழுதடைந்த அம்மாபாளையம் சாலையை செப்பனிட கோரிக்கை

பழுதடைந்த அம்மாபாளையம் சாலையை செப்பனிட கோரிக்கை
X

ராக்கியபாளையத்தில் பழுதான சாலையை செப்பனிட வேண்டும் என மா.கம்யூ., கட்சியினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு வழங்கினர்.

ராக்கியாபாளையம் வழியாக அம்மாபாளையம் வரையுள்ள பிரதான சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மா.கம்யூ., கட்சி அவினாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கிளை சார்பில், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடாசலம் அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், அம்மாபாளையம் கிளை செயலாளர் காமராஜ் ஆகியோர் திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கிய மனு:

பேரூராட்சிக்குட்பட்ட உமையஞ்செட்டிபாளையத்தில் இருந்து, ராக்கியாபாளையம் வழியாக, அம்மாபாளையம் வரையுள்ள பிரதான சாலையில், குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள், முழுமையாக மூடப்படாமல் உள்ளதால் அந்த சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அந்த சாலையை விரைவில் செப்பனிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!