அவினாசி வட்டார சுகாதார திருவிழாவில் 1,027 பேருக்கு பரிசோதனை

அவினாசி வட்டார சுகாதார திருவிழாவில்  1,027 பேருக்கு பரிசோதனை
X

அவினாசியில் வட்டார மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

அவினாசி வட்டார அளவிலான மருத்துவ முகாமில் பங்கேற்ற 1027 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், வட்டார அளவிலான சுகாதார திருவிழா, திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது. இதில், இலவச நோய் கண்டறிதல், தாய் சேய் நலம், காசநோய் கண்டறிதல், கண் பரிசோதனை, பல் பரிசோதனை, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, நல் வாழ்விற்கான யோகா மற்றும் தியானம் என பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல், தலைமை வகித்தார். அவினாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி முகாமை துவக்கி வைத்தார். அவினாசி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் பிரசாத்குமார் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர்கள் பர்கத்துல்லா, கோபாலகிருஷ்ணன், சிவபிரகாஷ், திருமுருகநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில், 1,027 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

முகாம் ஏற்பாடுகளை, வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், பேரூாட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself