கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு
மீட்கப்பட்ட திருமுருகநாத சுவாமி கோவில் நிலம்.
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில், மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான, இந்துசமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் பழமை வாய்ந்த அருள்மிகு திருமுருகநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில், 5.96 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 4.50 ஏக்கர் நிலத்தில் கோவில் கருவறை, தீர்த்தக்கிணறுகள், மன நோயாளிகள் தங்கும் மண்டபம், பூங்கா, வாகனங்கள் நிறுத்தும் இடம், கோவில் அலுவலகம் ஆகியவை உள்ளன.
இக்கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை, அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், அவரது உறவினர் சக்திவேல் ஆகியோர் ஆக்கிரமித்திருத்து வைத்துள்ளனர் எனவும், அந்நிலத்தை மீட்க வேண்டும் எனவும், ஊர் மக்கள் சிலர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கோவில் நிலங்களை மீட்க தமிழக அரசு வேகம் காட்டி வரும் நிலையில், இந்த புகார் அடிப்படையில், பூண்டி கோவில் செயல் அலுவலர் கங்காதரன், கிளார்க் சக்திவேல் (பொறுப்பு ) ஆகியோர் முன்னிலையில், கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, கம்பி வேலி அமைக்கப்பட்டது. 'மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 2 கோடி ரூபாயை தாண்டும்' என, கணக்கிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu