பணி வரன்முறை செய்யுங்க:அரசுக்கு ஆர்சிஎச் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை
மத்திய அரசின், தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், துப்புரவு ஊழியர்கள், இரவு காவலர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம், 1,500 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களே ஆர்.சி.எச். ஊழியர்கள் எனப்படுகின்றனர்.
இவர்களில், 3,140 பேருக்கு, குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில், அந்த ஆட்சியர்கள் நிர்ணயம் செய்யும் தினக்கூலியை வழங்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் ஏற்கனவெ வழிகாட்டியது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாததால், கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், பலரும் வேலைக்கு செல்லாமல் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அவ்வாறு வேலைக்கு செல்லாத ஊழியர்கள், அவர்களின் வாழ்வாதார சூழல் ஆகியவற்றை அறிந்துக் கொள்வதற்காக, தமிழ்நாடு அரசு சுகாதார நிலைய அனைத்து ஊழியர் சங்க மாநில தலைவர் எல்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் பி.வெங்டாச்சலம் மற்றும் நிர்வாகிகள், திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தனர். அவிநாசியில், சங்க உறுப்பினர்களுடன் இருவரும் ஆலோசனை நடத்தினார்.
அவர்கள் கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே எங்கள் கோரிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். தேர்தலில் வெற்றி பெற்ற பின், பணி நிரந்தரம் செய்து தருவதாக உறுதியளித்தார்; ஆனால், கோரிக்கை நிறைவேறவில்லை; விரைவில் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu