அவினாசியில் இ–சேவை மையத்துக்குள் மழைநீர்: சான்றிதழ் வழங்கும் பணி பாதிப்பு
அவினாசி உள்ள இ-சேவை மையத்தில், மழைநீர் புகுந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன.
அவினாசி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் இ–சேவை மையத்துக்குள் மழைநீர் ஒழுகியதால், கம்ப்யூட்டர் சேவை பாதிக்கப்பட்டு, பணிகள் முடங்கின.
திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா அலுவலகத்தின் ஒரு அறையில், இ–சேவை மையம் செயல்படுகிறது. இங்கு ஜாதி சான்று, வருமான சான்று, பட்டா, சிட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், இணைய வழி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, வழங்கப்படுகிறது. இரண்டு கம்ப்யூட்டர் மூலம் இப்பணி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களாக, இரவு பெய்யும் பலத்த மழையில், இ–சேவை மைய அலுவலக கட்டடத்தின் கூரையில் இருந்து மழைநீர் ஒழுகி, கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களுக்குள் தணணீர் புகுந்தது. கம்பயூட்டர் செயலிழந்ததால், ஊழியர்களால் பணி செய்ய முடியவில்லை. பல்வேறு சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்க வந்த மக்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
'கட்டடம் பழமையானதாக இருப்பதால், கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுகிறது; பராமரிப்புப்பணி மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது' என இ–சேவை மைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu