வெங்கடேசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா

வெங்கடேசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா
X

அவிநாசி, மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில்.

மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா, வரும் 17ம் தேதி துவங்குகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள மொண்டிபாளையத்தில், வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி வெங்கடேசப்பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக்கடனை இந்த கோவிலில் செலுத்தலாம் என்ற ஐதீகம் உள்ளது.

மேலத்திருப்பதி, ஊஞ்சல்வனம், சீனிவாசபுரம் என்று போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வரும் 17-ம் தேதி முதல் புரட்டாசி திருவிழா துவங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 22-ம்தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில். தினமும் காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது. உற்சவ நாட்களில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மூலவருக்கு வாராந்திர சனி, ஞாயிறு மாதாந்திர அமாவாசை நாட்களில் மட்டும் காலை 7 மணிக்கு திருமஞ்சனம் செய்யப்படும். புரட்டாசி திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்