திருமுருகன் பூண்டியில் பொதுமக்கள் சாலைமறியல்
Tirupur News- திருமுருகன் பூண்டி பஸ் ஸ்டாப் அருகே, அவிநாசி ரோட்டில் சாலைமறியல் செய்த பொதுமக்கள்.
Tirupur News,Tirupur News Today- அவிநாசி: திருமுருகன்பூண்டி அருகே விஜிவிஶ்ரீ கார்டன் பகுதியில் பஸ் நிற்காதது, அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி உள்பட்ட விஜிவி ஸ்ரீ கார்டன் பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு பிரதான பஸ் ஸ்டாப் திருப்பூர்-அவிநாசி சாலையில் உள்ளது. இருப்பினும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இங்கு நிற்பதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் வெளியிடங்களுக்கு சென்றுவர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சீரான குடிநீர் வசதி இல்லை. குறிப்பாக குடியிருப்பு நுழைவுவாயிலில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியாகும் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழகம், மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பூர் அவிநாசி சாலையில் இரு புறமும் மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம், காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அவிநாசி - திருப்பூர் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரும் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில், போக்குவரத்தான நேரத்தில் செய்யப்பட்ட இந்த மறியலால் வேலைக்கு செல்வோரும், பள்ளிகளுக்கு செல்வோரும் பலத்த சிரமப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu