திட்டப்பணிகளில் முறைகேட்டை கண்டித்து, பெண்கள் போராட்டம்
சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்.
நேற்று காலை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தேவேந்திர நகரை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் சேவூர் ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட, மாவட்ட இயக்குனர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தாங்கள் கூறும் தேவேந்திரநகர், வெண்ணிகாடு பகுதியில், 2019 -2020-ம் ஆண்டு நடந்த திட்டபணி குறித்த முறைகேடு நடந்திருந்தால், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்துசென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu