அவிநாசியில் செயற்கைக்கால் வழங்கும் நிகழ்ச்சி

அவிநாசியில் செயற்கைக்கால் வழங்கும் நிகழ்ச்சி
X

அவினாசியில், சக்‌ஷம் அமைப்பு சார்பில் செயற்கை அவையங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அவிநாசியில், சக் ஷம் அமைப்பு சார்பில் செயற்கைக்கால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர் மாவட்ட சக்ஷம் அமைப்பு, அவினாசி ரோட்டரி சங்கம் மற்றும் அவினாசி நெக்ஸ் ஜெனரேஷன் சார்பில் இணைந்து, செயற்கைகால் கேட்டு விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகள், 8 பேர் மற்றும் சக்கர நாற்காலி கேட்டு விண்ணப்பித்திருந்த ஒருவர் என, 9 நபர்களுக்கு ரூ.61 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால் மற்றும் நவீன சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கப்பட்டன.

அவினாசி ரோட்டரி சங்க அரங்கில், ரோட்டரி சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க ஆளுநர் சண்முகசுந்தரம் வழங்கினார். சக்க்ஷம் அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சக்க்ஷம் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம், அவினாசி பிரைடு ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!