அவிநாசி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.50% போனஸ் வழங்க உடன்பாடு

அவிநாசி விசைத்தறி தொழிலாளர்களுக்கு  13.50%  போனஸ் வழங்க உடன்பாடு
X

அவிநாசியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு, போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மண்டபத்தில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் முத்துசாமி, செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொழிற்சங்கத்தினர் சார்பில், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், செயலாளர் கனகராஜ், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், அவர்களுக்கான தேவைகள், உரிமைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பேச்சு வார்த்தையின் முடிவில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என, உடன்பாடு எட்டப்பட்டது.

Tags

Next Story
ai marketing future