அவிநாசியில் வரும் 4ம் தேதி மின்தடை

அவிநாசியில் வரும் 4ம் தேதி மின்தடை
X

Tirupur News-  அவிநாசியில் நாளை மறுதினம் ( சனிக்கிழமை) மின்தடை அறிவிப்பு (கோப்பு படங்கள்)

Tirupur News- அவிநாசியில் பராமரிப்பு பணிகளுக்காக வரும் 4ம் தேதி, மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது,

அவிநாசி துணை மின் நிலையத்தில் வருகிற 4-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி துணை மின்நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி

அவினாசி, வேலாயுதம் பாளையம், உப்பிலிபாளையம், செம்பியநல்லூர், சின்னேரி பாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், ராக்கியாபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவினாசி கை காட்டிப்புதூர், சக்தி நகர், குமரன் காலனி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்