விசைத்தறி உரிமையாளர் ஸ்டிரைக்: அவிநாசி சங்கம் ஆதரவு

விசைத்தறி உரிமையாளர் ஸ்டிரைக்: அவிநாசி சங்கம் ஆதரவு
X

அவிநாசி விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தும் போராட்டத்துக்கு அவிநாசி உரிமையாளர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கோவை, திருப்பூர் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள அவிநாசி, ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அரசு அறிவித்த, 20 சதவீத கூலி உயர்வை அமல்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் முன்வராதததை கண்டித்து, வரும் 9ம் தேதி முதல் கூட்டமைப்பினர் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு தருவது என முடிவெடுக்கப்பட்டது.

சொந்தமாக ஜவுளி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்று, ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!