தேவாலயத்தில் பொங்கல் விழா

தேவாலயத்தில் பொங்கல் விழா
X

சர்ச்சில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள்.

புனித தோமையார் தேவாலயத்தில் பொங்கல் விழா நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி புனித தோமையார் தேவாலயத்தில், பொங்கல் விழா நடந்தது. தேவாலய பங்கில் உள்ள, 13 அன்பியங்களில் அங்கம் வகிக்கும் குடும்பத்தினர் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பங்கு குரு கென்னடி, அருட்திரு. ஜெயராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. முடிவில், சிறப்பான முறையில் பொங்கல் வைத்தவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி