அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள்
Tirupur News,Tirupur News Today- அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
Tirupur News,Tirupur News Today- அவிநாசி ஊராட்சி ஒன்றியம் பழங்கரை, சின்னேரிபாளையம், நடுவச்சேரி ஆகிய 3 ஊராட்சி பகுதியில், குடியிருப்புகள் மிக அதிகமாக காணப்படுகின்றன. இப்பகுதிகளுக்கு 20, 25 நாட்களுககு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், போதிய குடிநீர் கிடைப்பதில்லை என, குற்றம் சாட்டி அப்பகுதியை சேர்ந்த 80 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தங்கள் பகுதிக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் போதிய அளவுக்கு குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. காலிக்குடங்களுடன் அலுவலக வாசலில் வரிசையாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், பழங்கரை ஊராட்சி துணைத்தலைவர் மிலிட்டரி நடராசன் உள்ளிட்டோர் கூறியதாவது,
எங்கள் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை தற்போது பல மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் குடிநீர் 5 ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே அளவு கொடுக்கப்படுகிறது. இதனால், மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படுகிறது. வாரம் ஒருமுறை வழங்கப்பட்ட தண்ணீர் கடந்த 2 ஆண்டுகளாக 20,25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிவிட்டு பழங்கரை, சின்னேரிபாளையம், நடுவச்சேரி ,பொங்குபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகள் மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எங்கள் ஊராட்சி பகுதிக்கு தண்ணீர் மிக குறைந்த அளவு 20,25 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தந்துவிட்டு தண்ணீர் வரி மிக அதிக அளவில் வசூலிக்கின்றனர். குடிநீர் அனைத்துப்பகுதிகளுக்கும் வழங்குவது போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை இநத இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu