அவிநாசியில் பென்ஷனர் தின விழா

அவிநாசியில் பென்ஷனர் தின விழா
X

பென்சனர் தின விழாவில் பங்கேற்றவர்கள்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பென்ஷனர் தின விழா நடைபெற்றது.

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின், அவினாசி வட்டாரக்கிளை சார்பில், அவினாசியில் ஓய்வூதியர் விழா நடந்தது.

துணை தலைவர் சாமிநாதன், வரவேற்று பேசினார். வட்டார தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். வட்டார செயலாளர் மணியன், ஆண்டறிக்கை வாசித்தார். அவினாசி உதவி கருவூல அலுவலர் அனித்ரா தர்ஷினி, ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் அகஸ்டின்ராஜ், செயலாளர் அங்கமுத்து, துணை தலைவர் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் மாநில பொருளாளர் ராமசாமி, பொது செயலாளர் தங்கராசா, தலைமை நிலைய செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சங்கத்தின் மாநில தலைவர் ராஜகண்ணன், சங்கத்தின் செயல்பாடு குறித்து பேசினார். 70, 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அவினாசி, காசிகவுண்டம்புதுாரில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடை வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business