பட்டா திருத்தம் செய்யணுமா? புதுப்பாளையத்தில் நாளை சிறப்பு முகாம்

பட்டா திருத்தம் செய்யணுமா? புதுப்பாளையத்தில்   நாளை சிறப்பு முகாம்
X
அவினாசி வட்டம், புதுப்பாளையம் ஊராட்சியில், பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

இது தொடர்பாக, புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோபி செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி, வருவாய்த்துறை சார்பில் பட்டாக்களில் உள்ள பெயர், உறவுமுறை, விஸ்தீரணம், வகைபாடு போன்றவற்றில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய வேண்டியது ஏதுமிருந்தால், அதை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், நாளை (10.12.2021) வெள்ளிக் கிழமை அன்று காலை 10.00 மணி முதல் இம்முகாம் நடைபெறவுள்ளது. அதுசமயம் மேற்படி திருத்தம் செய்ய வேண்டியதற்கான அசல் பத்திரங்கள், மூலப்பத்திரங்கள், சிட்டா, RSR, வில்லங்கச்சான்று போன்ற ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்த நகல் ஆவணங்களுடன், மனுவை நேரில் கொண்டு வந்து, முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!