அவினாசி அருகே பள்ளி சத்துணவில் புழு; பெற்றோர் அதிர்ச்சி

அவினாசி அருகே பள்ளி சத்துணவில் புழு; பெற்றோர் அதிர்ச்சி
X

புழுவுடன் காணப்பட்ட உணவு. 

அவினாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவில் புழு இருப்பது தெரிய வர, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. 348 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். பெற்றோர் சிலர் கூறுகையல், 'குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவில், புழு இருப்பதாக, கடந்த, 2,3 நாட்களாகவே, கூறி வருகிறோம். தரமான உணவுதான் வழங்கி வருகிறோம் என, சத்துணவு செய்பவர்கள் கூறுகின்றனர். நேற்று, சத்துணவில் புழு இருந்தததை ஆதாரபூர்வமாக காண்பித்துள்ளோம்,' என்றனர்.

பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், சத்துணவில் சேர்க்கப்படும் புதினாவில் புழு இருந்தது, தெரிய வந்தது. ஆனால், சத்துணவு செய்பவர்கள், அது புழு இல்லை எனக்கூறுகின்றனர். வரும், நாட்களில் இத்தகைய புகாருக்கு இடமளிக்காத வகையில், சுத்தமான முறையில் சத்துணவு செய்ய, அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!