அவினாசி அரசு கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்

அவினாசி அரசு கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்
X

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

கம்ப்யூட்டர் அறிவியல் துறை தலைவர் ஹேமலதா, வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் நளதம் தலைமை வகித்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நன்மைகளையும், சேமிப்பின் அவசியத்தையும் விளக்கினார்.

இயற்பியல் பேராசிரியர் பாலமுருகன், கல்லூரிக்கான தேவைகள், தற்போதைய நிதி நிலைமை, பெற்றோரின் பங்களிப்பு குறித்து விளக்கினார்.

பின், கல்லூரி வளர்ச்சி சார்ந்த பணிகள் குறித்து, பெற்றோரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. பெற்றோர், தாமாக முன்வந்து பங்களிப்பு வழங்குவதாக தெரிவித்தனர். இக்கல்லூரியில், முதுநிலை பட்டப் படிப்பு கொண்டு வர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்தனர். வணிகவியல் துறை தலைவர் செல்வதரங்கினி நன்றி கூறினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது