இலக்கை தாண்ட வைத்த வட மாநிலத்தவர்: 2 லட்சத்தை தாண்டி தடுப்பூசி

இலக்கை தாண்ட வைத்த வட மாநிலத்தவர்:  2 லட்சத்தை தாண்டி தடுப்பூசி
X

பைல் படம்.

அவினாசி வட்டாரத்தில் இலக்கை தாண்டி, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவினாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும், 31 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய, அவிநாசி வட்டார சுகாதாரத்துறையினர் சார்பில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த வட்டாரத்தில், 1.57 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என கணக்கெடுக்கப்பட்டிருந்தது.

வாரந்தோறும் நடக்கும் சிறப்பு முகாம் மற்றும் தினசரி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். வட மாநிலத்தினர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை, இலக்கை தாண்டி, 2 லட்சத்தை தாண்டியுள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்