புதிய வாக்காளர்களாக இணைய ஆர்வம்

புதிய வாக்காளர்களாக இணைய ஆர்வம்
X

பைல் படம்.

அவினாசியில் நடந்த வாக்காளர் சிறப்பு  திருத்த முகாமில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய பலரும் ஆர்வம் காட்டினர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அவிநாசி சட்டசபை தொகுதிக்குள் உள்ள, 313 ஓட்டுச்சாவடிகளில் இந்த முகாம் நடந்தது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள,வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டன. இரண்டு நாள் நடந்த முகாமில், 600 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வரும், 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்கும் முகாமிலும், புதிய வாக்காளர்கள், பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தேவையான திருத்தங்களையும் செய்து கொள்ள வேண்டும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture