புதுப்பாளையம் ஊராட்சியில் பூமி பூஜையுடன் வளர்ச்சிப்பணிகள் தொடக்கம்

புதுப்பாளையம் கிராமத்தில் தார் சாலை அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது, புதுப்பாளையம் ஊராட்சி. இங்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், புதுப்பாளையம் கிராமத்தில், ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில், தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.
நல்லி கவுண்டன்பாளையம் புதூரில் மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
அதேபோல், ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில், நல்லிகவுண்டன்பாளையம் புதூர் பொதுமக்களின் அவசர அத்தியாவசியம் கருதி, மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிக்கான பூமிபூஜையும் நேற்று நடைபெற்றது
இந்த நிகழ்வில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ஜெகதீஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சித்ரகலா, புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா, துணைத்தலைவர் சங்கீதா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu