சேவூரில் புதிய மின்வாரிய அலுவலகம்: இனி இல்லை இடநெருக்கடி

சேவூரில் புதிய மின்வாரிய அலுவலகம்:  இனி இல்லை இடநெருக்கடி
X

சேவூரில் புதிய மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட்டது.

இட நெருக்கடியுடன் செயல்பட்டு வந்த சேவூர் தெற்கு மின்வாரிய அலுவலகம், புதிய கட்டடத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி மின் கோட்டத்துக்கு உட்பட்ட, மின் நுகர்வோரை உள்ளடக்கி சேவூர் தெற்கு பகுதியில் சிறிய கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இட நெருக்கடிக்கு இடையே செயல்பட்டு வந்த இந்த அலுவலகம், தற்போது, சேவூர் பிரதான சாலையில், விசாலாமான வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முறியாண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவிகுமார், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உதவி மின்பொறியாளர் பழனிசாமி, முன்னிலை வகித்தார். தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் பால்ராஜ், சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
why is ai important to the future