திருமுருகன் பூண்டி நகராட்சியில் புதிதாக வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி
Tirupur News- திருமுருகன் பூண்டி நகராட்சியில் புதிதாக வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி துவக்கம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருமுருகன்பூண்டி நகராட்சியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் புதிதாக வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி 13-வது வாா்டு ராக்கியாபாளையம் பாலாஜி நகரில் நடந்தது. ஆணையா் ஆண்டவன் அறிவுறுத்தலின்படி நடந்த இந்நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரி பொன்னுசாமி, பொறியாளா் நக்கீரன், உதவி பொறியாளா் செந்தில்குமரன், பணி மேற்பாா்வையாளா் அமுதா, வாா்டு உறுப்பினா்கள் மதிவாணன், பாரதி, சம்சாத் பேகம் அப்பாஸ், சுஜினி சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது குறித்து திருமுருகன்பூண்டி நகராாட்சி நிா்வாகத்தினா் கூறியதாவது,
திருமுருகன்பூண்டியில் வீட்டு குடிநீா் இணைப்பு 12 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. இதுவரை பல்வேறு காரணங்களால், பொதுமக்கள் விண்ணப்பித்தும் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது, முன்னுரிமை அடிப்படையில் பதிவுக் கட்டணம், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவா்களுக்கு கள ஆய்வு மேற்கொண்டு மதிப்பீடு செய்து புதிதாக வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை தொடங்கியுள்ளோம். ஏற்கெனவே 9,180 இணைப்புகள் உள்ள நிலையில், புதிதாக 1,430 இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றனா்.
பொதுமக்கள் கோரிக்கை
ராக்கியாபாளையம், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நகரமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கில் புதிய குடியிருப்புகள் உருவாகி விட்டன. குடியிருப்பு பகுதிகளும் விரிவடைந்துக்கொண்டே வருகின்றன. அதனால், ராக்கியாபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட பாலாஜி நகர், கணபதி நகர், குறிஞ்சி நகர், மகாலட்சுமி நகர், ஜெகநாதன் நகர் என சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில், பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி இப்பகுதி மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu