/* */

தேசிய நுகர்வோர் உரிமை தின விழா

திருமுருகன்பூண்டி கன்ஸ்யூமர் அசோசியேஷன் சார்பில் நடந்த நுகர்வோர் தின விழாவில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தேசிய நுகர்வோர் உரிமை தின விழா
X

நுகர்வோர் தின விழாவில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. 

திருமுருகன் ரோட்டரி கிளப் ஹாலில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை, தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் திருமுருகன் பூண்டி ரோட்டரி கிளப், அவிநாசி கிழக்கு ரோட்டரி கிளப், நிட் சிட்டி ரோட்டரி கிளப், ஆனந்தம் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, தேசிய நுகர்வோர் உரிமை தின விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தின.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு, குடிமக்களின் ஒத்துழைப்பு குறித்து பேசினார். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். எல்.பி.ஜி.,கேஸ் விநியோகஸ்தர் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் தலைவர் முகம்மது ஜாபர், மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு கேடயம் வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவைகளை பாராட்டி, தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் தலைவர் காதர்பாட்சா துணை தலைவர் அவனாசிலிங்கம், பொது செயலர் ராமலிங்கம், அமைப்பு செயலர் கிருஷ்ணமூர்த்தி, சட்ட ஆலோசகர் வக்கீல் சதாசிவம் உள்ளிட்டோருக்கு, அதிகாரிகள் கேடயம் வழங்கினர்.

அவிநாசி கிழக்கு ரோட்டரி தலைவர் விசித்ரா, வக்கீல் கவிதா ஆகியோர் பேசினர். கன்ஸ்யூமர் சங்க செயற்குழு உறுப்பினர் தனசேகர் நன்றி கூறினார்.

Updated On: 26 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு