ஜனவரி 21ல் தமிழகம் முழுவதும் கள் இறக்குவோம்: கள் இயக்கம் நல்லசாமி
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
திருப்பூர் மாவட்டம், அவினாசி, 'களஞ்சியம்' விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:
பாமோலின் எண்ணெய், சோயா எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய்க்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இறக்குமதி வர்த்தகம் அதிகரிக்கும். இதனால், உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கும்; விவசாயிகள், வாழ்வாதரம் இழப்பர். எனவே, உள்நாட்டு உற்பத்திக்கு மானியம் வழங்கி, எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.
அரசாங்கங்கள் வழங்கும் இலவசம், மானியம், தள்ளுபடி போன்றவையால், மூலம், லஞ்சம், முறைகேடு தான் அதிகரிக்கிறது. இலவசங்களால் தான் நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது. எனவே, இலவசங்களை ஒழிக்க வேண்டும். வரும், ஜனவரி 21ம் தேதி, மாநிலம் முழுக்க கள் இறக்கி, வர்த்தகம் செய்ய உள்ளோம். காவல்துறையினர் எங்களை தடுக்கக்கூடாது. அவ்வாறு தடுத்தால், அரசியலமைப்பு சட்டப்படி, கள் என்பது தடை செய்யப்பட்ட பொருள் என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இந்த கூட்டத்தில், 'களஞ்சியம்' விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், குருசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu