திருமுருகன்பூண்டி நகராட்சியின் முதல் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது

திருமுருகன்பூண்டி நகராட்சியின் முதல் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது
X

பூண்டி நகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற்றது. 

சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து, இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சியின், முதல் மன்றக்கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து, இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சியின், முதல் மன்றக்கூட்டம் நடைபெற்றது.ஆணையர் முகமது சம்சுதீன், வரவேற்று பேசினார். மன்ற தலைவர் குமார் (தி.மு.க.,) அனைத்து கவுன்சிலர்களையும் தனித்தனியாக வரவேற்று பேசினார்.

அவர் பேசுகையில்,''கவுன்சிலர்கள் பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், மன்றத்தில் ஒருமித்த கருத்துடன், நகரின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளாக மன்றம் இல்லாததால், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் போன்ற மக்களின் அடிப்படை பிரச்னைகள் ஏராளமாக தேங்கி கிடக்கின்றன. இப்பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண, இணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.

கூட்டத்தில், பல்வேறு கவுன்சிலர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்னைகள்; நகராட்சியில் நிரந்தர பொறியாளர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். பல்வேறு பணிகளுக்கு உத்தேச மதிப்பு என்ற அடிப்படையில் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது; இதை தவிர்த்து, சரியான மதிப்பீட்டை குறிப்பிட்டு, தீர்மானமாக கொண்டு வர வேண்டும். கடந்த, 7 மாதமாக கொசு மருந்து தெளிக்கவில்லை. குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டும் தெருவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

பாரபட்சமின்றி, அனைத்து வார்டுகளுக்கும் தெருவிளக்கு பொருத்த வேண்டும். பொறியாளர், நகரமைப்பு அலுவலர், அக்கவுண்டன்ட், பணி மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!