மங்கலம் அருகே ஊட்டச்சத்து தானியம் பயன்படுத்த வேளாண்துறை ஊக்குவிப்பு

மங்கலம் அருகே ஊட்டச்சத்து தானியம் பயன்படுத்த வேளாண்துறை ஊக்குவிப்பு
X
திருப்பூர் மங்கலம் அருகே நடந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்துமிக்க தானிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிராமத்தில், சிறுதானிய அபிவிருத்திக்காக, 100 விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு திட்ட, மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பங்கேற்று, சிறுதானிய பயிரின் நன்மைகள், சாகுபடி முறை குறித்து விளக்கினார்.

அவர் கூறுகையில், 'சிறுதானிய பயிர் சாகுபடியால், மண் வளம் பாதுகாக்கப்படும். சிறுதானிய பயிர்களை மதிப்புக்கூட்டும் உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம், கூடுதல் லாபம் பெற முடியும்,' என்றார்.

திருப்பூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அருள்வடிவு, வேளாண்மை அலுவலர் சுகன்யா, துணை வேளாண்மை அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினர்.

Tags

Next Story