துாய்மை பணியாளர்ளுக்கு மருத்துவ முகாம்

துாய்மை பணியாளர்ளுக்கு மருத்துவ முகாம்
X

அவிநாசி பேரூராட்சி துறை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அவினாசி பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவினாசி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் 'விழுதுகள்' அமைப்பின் சார்பில், பேரூராட்சியில் பணிபுரியும், துாய்மை பணியாளர்கள், அனைத்து பணியாளர்களுக்கான மருத்துவ முகாம், சமுதாய நல கூடத்தில் நடந்தது.

அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து பேசுகையில்,''துாய்மை பணியாளர்கள் தங்கள் உடல் நலனை பேணி பாதுகாத்துக் கொண்டால் தான், துாய்மை பணியில் முழு கவனம் செலுத்த முடியும். இதுபோன்ற மருத்துவ முகாமை, சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

'விழுதுகள்' அமைப்பினர் திட்ட மேலாளர் சந்திரா, அவிநாசி பேரூராட்சி தலைமை எழுத்தர் பாலசுப்ரமணி, முன்னிலை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் பொன்னுசாமி, உள்ளிட்ட பலர் பேசினர்.

அவினாசி பொது சுகாதாரதுறை மருத்துவ அலுவலர் சந்திரன் தலைமையிலான செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை மேற்கொண்டனர். துாய்மை பணியாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும், நோய் எதிர்ப்பு சக்தி தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

நிகழ்ச்சியில், 'விழுதுகள்' அமைப்பின் இயக்குனர் தங்கவேல், திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், கட்சன் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!