அன்னூரில் ஏப்ரல் 25ல் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

அன்னூரில் ஏப்ரல் 25ல் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
X
அன்னூரில் ஏப்ரல் 25ம் தேதி, வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசின் 'வருமுன் காப்போம்' திட்டத்தில், பொன்னே கவுண்டன்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், வருகிற 25ம் தேதி காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் இ.சி.ஜி, எக்ஸ்ரே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம், காச நோய், கண் ஆகியவற்றிற்கு நவீன கருவிகள் வாயிலாக பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு காப்பீட்டு திட்டத்தில் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள், நிபுணர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.

அத்துடன், கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ரத்ததான முகாம் நடக்கிறது. யோகா கற்பிக்கப்படுகிறது. மருத்துவ காப்பீடு அட்டை தேவைப்படுவோர், ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுடன் முகாமுக்கு வரவேண்டும் என, வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!