அவிநாசி; நிலுவை தொகையை வழங்க மாதர் சங்கம் கோரிக்கை
Tirupur News- 100 நாள் வேலை திட்டம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- 100நாள் வேலை நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மனு அளித்தனா்.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க ஒன்றிய செயலாளா் செல்வி, ஒன்றியத் தலைவா் சித்ரா ஆகியோா், அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டு முழுவதும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசு நிா்ணயித்துள்ள கூலியை முழுமையாக வழங்க வேண்டும்.
தனியாக வசிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை அட்டை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. 100 நாள் வேலை திட்டத்தை நகா்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu