புதுப்பாளையம் ஊராட்சி சார்பில் குடியிருப்பு பகுதியில் தூய்மைப்பணி

புதுப்பாளையம் ஊராட்சி சார்பில் குடியிருப்பு பகுதியில் தூய்மைப்பணி
X

முட்செடிகள் அகற்றப்பட்டு, தூய்மையாக காட்சி தரும் குடியிருப்பு வளாகம். 

அவினாசி அருகே, புதுப்பாளையம் ஊராட்சி சார்பில், பிளாசம் குடியிருப்பு வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகாவுக்கு புதுப்பாளையம் ஊராட்சி நிர்வாகம், மழைக்கால நோய்கள் பரவாமல் இருக்க தூய்மைப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, அண்மையில் கொசு மருந்து அடிப்பு உள்ளிட்ட பணிகளை, ஊராட்சி தலைவர் கே.பி. கஸ்தூரிபிரியா, வார்டு கவுன்சிலர்கள் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட சாலை, சமன்படுத்தப்பட்டு, முட்செடிகள் அகற்றப்பட்டன.

அவ்வகையில் தற்போது வஞ்சிபாளையத்தில் உள்ள பிளாசம் குடியிருப்பு வளாகத்தில், புதுப்பாளையம் ஊராட்சி சார்பில், இன்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த புதர்கள், முட்செடிகள் அகற்றப்பட்டு, மழையால் பாதிக்கப்பட்ட ரோடு, சமப்படுத்தப்பட்டது.

குடியிருப்பு வளாகத்தினரின் கோரிக்கையை ஏற்று, இப்பணிகளை செய்து தந்த புதுப்பாளையம் ஊராட்சித் தலைவி கே.பி. கஸ்தூரி பிரியா, வார்டு கவுன்சிலர், ஊராட்சிச் செயலாளர் உள்ளிட்டோருக்கு, அப்பகுதியினர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

Tags

Next Story