விசைத்தறி போராட்டத்துக்கு ஆதரவாக மா.கம்யூ., கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்

விசைத்தறி போராட்டத்துக்கு ஆதரவாக  மா.கம்யூ., கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்
X

தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட மா.கம்யூ., கட்சியினர்.

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண கோரி, மா.கம்யூ., கட்சியினர் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை வழங்கத வேண்டும்; தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில், அவினாசி ஆட்டையாம்பாளையத்தில் தெருமுனை பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன், தலைமை வகித்தார். விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்முகம், கருப்புசாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மோகனசுந்தரம், முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future