மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக்கடைகள்: அவினாசியில் அத்துமீறல்

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக்கடைகள்: அவினாசியில் அத்துமீறல்
X
அவினாசியில், விதிமீறி செயல்பட்ட இறைச்சிக்கடை .
விதிகளை மீறி, மகாவீர் ஜெயந்தியன்று, அவினாசியில் சில இறைச்சிக் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று, மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டதையடுத்து, இறைச்சிக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள அனைத்து இறைச்சிக்கடைகளும், திறக்கப்பட்டிருந்தன. இதனால், மக்கள் அதிருப்தியடைந்தனர்.

இதுகுறித்து, கள ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் அமைதி காத்ததால், கடைக்காரர்கள் எவ்வித தயக்கமும் இன்றி, இறைச்சி விற்பனையில் ஈடுபட்டனர். வருங்காலங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!