அவினாசி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி மா.கம்யூ., கட்சியினர் மரம் நடும் போராட்டம்

அவினாசி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி மா.கம்யூ., கட்சியினர் மரம் நடும் போராட்டம்
X

திருமுருகன்பூண்டி பேரூராட்சி, உமையஞ்செட்டிபாளையத்தில், சாலையில் மரக்கன்று நடும் போராட்டம் நடத்தப்பட்டது.

அவினாசி அருகே சாலையை சீரமைக்க கோரி, மா.கம்யூ., கட்சியினர் மரம் நடும் போராட்டம் நடத்தினர்.

அவினாசி அருகே சாலையை சீரமைக்க கோரி, மா.கம்யூ., கட்சியினர் மரம் நடும் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட உமையஞ்செட்டிபாளையம் சாலை படுமோசமாக உள்ள நிலையில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மழை பெய்து வரும் சூழலில், சேறு சகதி நிறைந்த மழைநீர் குளமாக தேங்கி நிற்கிறது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியினர் சார்பில், சாலையில் வாழை மரக்கன்று நடவு செய்யும் போராட்டம் நடத்தப்பட்டது. கட்சி நிர்வாகிகள் உட்பட அப்பகுதி மக்கள் இதில் பங்கேற்றனர்.

திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சாலையில், இரண்டு இடங்களில் குழாய் பதிக்கும் பணி நடைபெற வேண்டியிருப்பதால், அப்பணி முடிந்தவுடன் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர் . இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!