நீர் நிலைகளில் தீபம் ஏற்றி வழிபட்ட மக்கள்

நீர் நிலைகளில் தீபம் ஏற்றி வழிபட்ட மக்கள்
X

அவினாசி அருகே உள்ள கானூர் குளக்கரையில், தீபமேற்றி மக்கள் வழிபட்டனர்.

அவினாசி சுற்றுவட்டார பகுதியில், நீர்நிலைகளில், தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.

வறட்சியால் காய்ந்து கிடந்த குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், சமீபத்தில், கொட்டி தீர்த்த மழையால் நிரம்பி ததும்புகின்றன. கோவை, கவுசிகா நீர்க்கரங்கள், கானுார் குளம் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கத்தினர், கானூர் குளக்கரையில் தீபம் ஏற்றினர்.

சிள்னவேடம்பட்டி, அவிநாசி அருகேயுள்ள கானூர் குளம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மக்கள், குடும்பம், குடும்பமாக வந்து தீபம் ஏற்றி, வழிபட்டனர். நீர்நிலை பாதுகாப்பு இயக்கத்தினர் கூறுகையில், 'மக்கள் மத்தியில், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், நீர்நிலைகளை பாதுகாக்க, அரசின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையிலும் தான், குளக்கரை மற்றும் நீர் நிலைகளில் தீபம் ஏற்றி வழிபட்டோம்' என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!