எல்.ஐ.சி., முகவர்களுக்கு பென்ஷன் திட்டம் சங்கம் எதிர்பார்ப்பு

எல்.ஐ.சி., முகவர்களுக்கு பென்ஷன் திட்டம்  சங்கம் எதிர்பார்ப்பு
X

அகில இந்திய எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

எல்ஐசி முகவர்களுக்கு, பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய முகவர் சங்கத்தின் அன்னுார் மற்றும் அவிநாசி கிளை சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம், திருப்பூர் மாவட்டம், அவினாசி எல்.ஐ.சி., அலுவலக வளாகத்தில் நடந்தது. சங்கத்தின் தலைவர் நாகராஜன், செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்கத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

நிர்வாகிகள் கூறியதாவது:

எல்.ஐ.சி., முகவர்களுக்கு, குறைந்தபட்சம், 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன், தொடர்ந்து கமிஷன் வழங்க வேண்டும். முகவர்களை, பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும். எல்.ஐ.சி., முகவர்களை அமைப்பு சாரா நல வாரியத்தில் இணைக்க வேண்டும். எல்.ஐ.சி.,யை பொதுத்துறை நிறுவனமாகவே நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
ai healthcare products