சிறுத்தை சிக்கியது! மக்கள் நிம்மதி

சிறுத்தை சிக்கியது! மக்கள் நிம்மதி
X

கூண்டுக்குள் அடைபட்ட சிறுத்தையின் முகம் மூடியபடி எடுத்துச்செல்லப்பட்டது.

மூன்று நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, ஒரு வழியாக பிடிக்கப்பட்டது.

கடந்த, 24ம் தேதி, காலை, 6:30 மணிக்கு, திருப்பூர் மாவட்டம், அவிநாசி பாப்பாங்குளத்தில் உள்ள தோட்டத்தில், சோளத்தட்டு அறுக்க சென்ற விவசாயிகள் இருவரை சிறுத்தை தாக்கியது. அன்று காலை, 8:00 மணியில் இருந்து, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல வகைகளில் முயற்சி மேற்கொண்டனர். அவர்களது கண்காணிப்பில் இருந்து விலகிய சிறுத்தை பொங்குபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்ததாக தகவல் வெளியானது.

நேற்று காலை அம்மாபாளையம் தண்ணீர்பந்தல் உள்ள தோட்டத்தையொட்டிய பகுதியில், ராஜேந்திரன், 60 என்பவரை சிறுத்தை தாக்கியது. அங்கு வனத்துறையினர் முகாமிட்டு, சிறுத்தையை பிடிக்கும் பணி மேற்கொண்டனர். கால்நடை மருத்துவர் விஜயராகவன், இயற்கை பாதுகாப்பு சங்க நிர்வாகி ஜலாலுதீன் உள்ளிட்டோர் ஜெசிபி., வாகனம் மூலம், சிறுத்தை பதுங்கியிருந்து இடத்துக்கு சென்று, மயக்க ஊசி செலுத்தினர். பின், கூண்டில் ஏற்றப்பட்டு, உடுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் மூன்று நாட்களாக அச்சத்தில் ஒளிந்திருந்த கிராம மக்கள் அச்சம் தெளிந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture