திருப்பூர்; அவிநாசிலிங்கேஸ்வர் கோவிலில் நாளை (2ம் தேதி) கும்பாபிஷேகம்
Tirupur News- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை வெள்ளிக்கிழமை, கோலாகலமாக நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது; நாயனாரால், முதலை விழுங்கி குழந்தையை, தேவாரம் பாடி மீட்டெழ வைத்த அற்புதம் நிகழ்ந்த திருத்தலம்; கோவிலில், நாளை காலை, 9:15 முதல், 10:15 மணிக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழா, கடந்த 24ம் தேதி விநாயகருக்கு வேள்வியோடு துவங்கியது. மொத்தம், எட்டு கால யாக பூஜையில், இன்று காலை, ஆறாம் கால வேள்வி பூஜையும், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.
நாளை காலை, எட்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. அதன்பின், அவிநாசியப்பர், பெருங்கருணாம்பிகை அம்மன், சுப்ரமணிய பெருமான் ஆகிய மூலவர் சன்னதி, விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு நாளை, காலை, 9:15 முதல் 10:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவில், ஆதினங்கள், சிவாச்சார்யார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். விழாவையொட்டி, அவிநாசி விழாக்கோலம் பூண்டுள்ளது.
1,000 போலீசார் பாதுகாப்பு
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து மாற்றம் போன்றவற்றை செய்துள்ளனர். பாதுகாப்பு பணியில், மாநகரம், மாவட்ட போலீசார் என, ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பல ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் திரள வாய்ப்புள்ளதால் கோவை - ஈரோடு நெடுஞ்சாலை மற்றும் சேவூர் ரோடு, மங்கலம் ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும். நெரிசலில் மக்கள் கூட்டம் அவதிப்படாமல் தவிர்க்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu