முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
X

அவிநாசி பெரிய கருணை பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அவினாசி பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

திருப்பூர் மாவட்டம், அவினாசி தெற்கு ஒன்றியம் சார்பில், அவிநாசிலிங்கம்பாளையம், துலுக்கமுத்துார், குப்பாண்டம்பாளையம், காசிகவுண்டம்புதுார், வஞ்சிபாளையம், ராஜன் நகர், கணியாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். பழங்கரை கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் தனபால், அம்மா பேரவை செயலாளர் தம்பி ராஜேந்தின்ர உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேலாயுதம்பாளையம் ஊராட்சி, பெரிய கருணைபாளையத்தில், தெற்கு ஒன்றிய பொருளாளர் ரமேஷ் தலைமையில், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர் மணி, முன்னிலை வகித்தார். கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story