அவிநாசி அரசு கலை கல்லுரி: தொலைதுார கல்வியில் பயில அழைப்பு

அவிநாசி அரசு கலை கல்லுரி: தொலைதுார கல்வியில் பயில அழைப்பு
X

அவிநாசி கலை  கல்லூரி (பைல் படம்) 

அவினாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் செயல்படும் தொலை துார கல்வி மையத்தில் பட்டப்படிப்பு பயில கல்லுாரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின், கற்போர் உதவி மையம் செயல்படுகிறது. இந்த தொலைதுார கல்வி மையத்தில், 32 இளங்கலை பட்டப்படிப்பு, 31 முதுகலை பட்டப்படிப்பு, 15 டிப்ளமோ, 12 சான்றிதழ் படிப்பு மற்றும் 10 குறுகிய கால படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா, கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், கல்லுாரியின் சர்வவேச வணிக பாட பிரிவின் தலைவருமான பாலமுருகன் ஆகியோர் கூறியதாவது:

உயர்கல்வி படிக்கும் ஆர்வமிருந்தும் அதற்கு வாய்ப்பில்லாமல், வீடுகளில் உள்ள பெண்கள், வேலைக்கு செல்வோர், கல்லுாரி படிப்பை பாதியில் கைவிட்டோர் ஆகியோர், வீட்டில் இருந்தபடியே பட்டப்படிப்பு படிக்கலாம். அவர்களுக்கு தேவையான பாடப்புத்தகம் மற்றும் அடையாள அட்டை ஆகியவை தபால் மூலம் வீட்டிற்கு அனுப்பப்படும்.தொலைதுார கல்விக்கான வார இறுதி நாட்களில் வழங்கப்படும் பயிற்சி மற்றும் தேர்வு ஆகியவை அவிநாசி அரசு கல்லுாரியில் உள்ள மையத்தில் நடைபெறும். பாடப்பிரிவுகளில் இணைந்து படிக்க, இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரம் தேவைப்படுவோர், 9944151592 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!