அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்; மாணவ மாணவியர் ஆர்வம்
Tirupur News,Tirupur News Today- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவிநாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பரம்பொருள் அறக்கட்டளை இணைந்து நடத்திய சர்வதேச யோகா தினம் நடைபெற்றது.
சர்வதேச வணிகத்துறை,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவிநாசி மற்றும் பரம்பொருள் அறக்கட்டளை ,அவிநாசி ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் திரு.பெத்தண்ணசாமி, யோகா பயிற்றுனர், பரம்பொருள் அறக்கட்டளை அனைவரையும் வரவேற்றார். யோகா பயிற்சியின் அவசியம் குறித்தும், அதன் மூலம் ஏற்படும் உடல் மற்றும் உள்ளத்திற்கான நன்மைகளை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார் .
தலைமை உரையாற்றிய கல்லூரி முதல்வர் முனைவர் ஜோ. நளதம் பேசுவையில், வேலைப்பளு மற்றும் வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் ஏற்படும் மனச்சோர்வினை தடுக்கும் வகையில் யோகா செயல்படுவதாகவும் இயன்ற வரை யோகா பயிற்சி செய்து பலன் பெற வேண்டும், என்றார். உலகத்திற்கே யோகாவின் அடிப்படையை தெளிவாக எடுத்துரைத்தோர் இந்தியர்கள் என்றும், மறவாமல் நாமும் அதனை பின்பற்றி பயனடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், நாடி சுத்தி, மஹாரம் போன்ற யோக நிலைகள் மன அமைதிக்கான தியான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இறுதியாக மாணவ மாணவியர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து துறை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த சசி, மணிகண்டன், பெத்தண்ண சாமி மற்றும் சித்ரா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்நிகழ்வினை ஒருங்கிணைத்த சர்வதேச வணிகத் துறை தலைவர் முனைவர் செ.பாலமுருகன், பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu