அவிநாசி; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டிட பாதுகாப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு

அவிநாசி; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டிட பாதுகாப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு
X

Tirupur news-அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டிட பாதுகாப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர்.

Tirupur news- அவிநாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டிட பாதுகாப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர்.

Tirupur news, Tirupur news today- அவிநாசி,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டிட பாதுகாப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு

அவிநாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவிநாசியில் தமிழக அரசு மற்றும் கோவை கல்லூரி இணை இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில் கட்டிட பாதுகாப்பு மற்றும் தணிக்கை குழு ஆய்வு நடைபெற்றது.


இதில் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகளின் படி, அவிநாசி அரசு கல்லூரியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் இதர வசதிகள் (கிணறு,ஆழ்துளை கிணறு, மின் கம்பங்கள், மின் கம்பிகள் மற்றும் நீர் வழிகள்) மாணவர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பாதுகாப்புடன் அமைவதை உறுதி செய்ய தணிக்கை குழு உறுப்பினர்களாக முனைவர் .சு.மணிமேகலை, முதல்வர், புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்லடம் மற்றும் டி.பூபதி உதவி பொறியாளர், பொதுப்பணித்துறை, திருப்பூர், ச.வேலுச்சாமி, நிலைய அலுவலர், தீயணைப்பு துறை ,அவிநாசி ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.


கல்லூரியில் உள்ள ஏனைய கட்டிடங்கள் வகுப்பறைகள் ஆய்வகங்கள் நீர்த்தேக்க தொட்டிகள் கழிப்பறைகள் மற்றும் மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டு உரிய அறிக்கைகளை வழங்கினர்.


கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் மற்றும் கட்டிட பாதுகாப்பு குழுவினர் திருமதி பி.ஹேமலதா முனைவர் செ.பாலமுருகன், முனைவர்.லூயிஸ் மற்றும் அலுவலக ஊழியர்கள் திரு. நாச்சிமுத்து மற்றும் சம்பத் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!