அவினாசி பகுதியில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விவசாயிகள் ஆர்வம்

அவினாசி பகுதியில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விவசாயிகள் ஆர்வம்
X

அவினாசி வட்டாரத்தில், மஞ்சள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவினாசி வட்டாரத்தில், கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரித்திருக்கிறது.

அவினாசி வட்டாரத்தில், கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரித்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கருவலுார், தண்டுக்காரன்பாளையம், சேவூர், நடுவச்சேரி உள்ளிட்ட இடங்களில், மஞ்சள் சாகுபடியில் பெருமளவு விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

சில ஆண்டுகளாக, மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால், மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்திருந்தது. தற்போது, ஓரளவு விலை கிடைப்பதால், சாகுபடி பரப்பு அதிகரித்திருக்கிறது. வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில், ''அவிநாசி வட்டாரத்தில், 500 ஏக்கர் பரப்பில் மஞ்சள் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது கடந்தாண்டை விட அதிகம்'' என்றனர்.

விவசாயிகள் சிலர் கூறுகையில், 'மஞ்சள் ஓராண்டு பயிராக இருப்பதால் விலையில் லாபம் கிடைத்தால் மட்டுமே மஞ்சள் பயிரிடுவர். முந்தைய ஆண்டுகளில், மஞ்சளுக்கு நல்ல விலை இல்லை. நடப்பாண்டு, ஓரளவு விலை கிடைக்கும் என நம்புகிறோம்' என்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!