அவினாசியில் கஞ்சா, போதை ஊசி அதிகரிப்பு: பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை
அவினாசியில், கஞ்சா, போதை ஊசி புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறி, ராயம்பாளையம் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர்.
அவினாசியில் கஞ்சா, போதை பழக்கம் அதிகரித்திருப்பதாக, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மக்கள் புகார் அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி ராயம்பாளையம் கிராமத்தில் உள்ள சங்கமாங்குளக்கரையில், இரு நாட்களுக்கு முன், மாடு மேய்க்கச் சென்ற பழனாத்தாள், 70 என்ற மூதாட்டியின் காதை அறுத்து, மர்ம நபர் ஒருவர், அவர் அணிந்திருந்த கம்மலை பறித்துச் சென்றார். இச்சம்பவம் தொடர்பாக, அவினாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், ராயம்பாளையம் பகுதியை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள், அவினாசி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பவுல்ராஜ், ஆய்வாளர் முரளி ஆகியோரிடம் மனு வழங்கி கூறியதாவது;
சங்கமாங்ககுளத்துக்குள் கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் பலர் கூட்டாகவும், தனித்தனியாகவும் போதை ஊசி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவிநாசி நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தாரளமாக விற்கப்படுகின்றன. இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்' என, காவல்துறை துணை கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu