அவிநாசி; மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 87.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

அவிநாசி; மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 87.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
X

Tirupur News- அவிநாசியில் நடந்த மக்கள் தொடா்பு முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினாா்.

Tirupur News- அவிநாசியில் நடந்த மக்கள் தொடா்பு முகாமில் 160 பயனாளிகளுக்கு ரூ. 87.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினாா்.

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் நடந்த மக்கள் தொடா்பு முகாமில் 160 பயனாளிகளுக்கு ரூ. 87.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் அவிநாசி அருகே துலுக்கமுத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

முகாமில், மாற்றுத்திறனாளிகள், முதியோா், ஆதரவற்றோா் உள்ளிட்டோருக்கு உதவி தொகைக்கான ஆணை, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி, தையல் இயந்திரங்கள், வீட்டுமனை பட்டா என 160 பயனாளிகளுக்கு ரூ. 87.13 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் ஆயத்தீா்வுத் துறை சாா்பில் போதைப்பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

இதைத் தொடா்ந்து குப்பாண்டம்பாளையம் ஊராட்சியில் பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பகுதி நேர நியாய விலை கடை, அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பொது விநியோக அங்காடி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் ராம்குமாா் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!